ஜெ.என்., சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்க, குரு ராமானுஜம் இயக்கத்தில், வெற்றி — தியா மயூரிகா நடிக்கும் புது படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடக்கிறது.
பெயரிடப்படாத இப்படத்தில், மாரிமுத்து மற்றும் கே.ஜி.எப்., படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு ஆகியோர், முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
படம் குறித்து வெற்றி கூறியதாவது: 8 தோட்டாக்கள் படத்தில், நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்ததை பலரும் பாராட்டினர்.
அதே போல, ஜீவி படத்திலும், எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதேபோல், இந்த புது படத்திலும், சிறப்பான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லராக இப்படம் உருவாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

