‘நடிகை ராதிகா ஆப்தே, ஹிந்தி மற்றும் ஆங்கில படங்கள் சிலவற்றில், மிகக் கவர்ச்சியாக நடித்தார். இதையடுத்து, அதே போன்ற கதாபாத்திரங்கள் தேடி வந்தன.
இது குறித்து ராதிகா கூறுகையில், ”கதைக்கு தேவை என்றால், கவர்ச்சியாக நடிப்பேன். ஆனால் பலர் தேவையே இல்லாமல், கவர்ச்சியாக நடிக்கும்படி கூறுகின்றனர்.
உடலை வியாபாரமாக்குபவள் நான் அல்ல என்பதை, அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என காட்டமாக கூறினார்.













