ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம், சென்னை நேரு அரங்கில் நடந்தது.
அப்போது தன் அரசியல் குறித்து, ரஜினி பேசுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். விழா நடத்த இடமளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டார்.
மேலும், ‘டிசம்பர் 12ம் தேதி, என் பிறந்த நாளின் போது, ஊரில் இருக்க மாட்டேன். ஆகவே, ரசிகர்கள் எவரும், என் வீட்டுக்கு வர வேண்டாம்’ என தெரிவித்தார்.

