லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரனுக்கு, மலேஷிய பல்கலை, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இதையொட்டி நடந்த பாராட்டு விழாவில், சுபாஸ்கரன், பிரேமா சுபாஸ்கரன், இயக்குனர்கள் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மணிரத்னம் பேசுகையில், ”சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க விரும்புகிறேன்,” என்றார்.நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக வந்த, ஏ.ஆர்.முருகதாசும் இதே போல் கூறினார். மேடையில் இருந்த பிரேமா சுபாஸ்கரன், ”ஆளுக்கு ஒரு பாகமாக எடுங்கள்,” என்று புன்னகைத்தார்.

