சிவாஜி கணேசன் நடித்த படங்களின் பெயரை, மீண்டும் வைப்பதற்கு, அவரது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், தலைப்புகள் மாற்றப்படுவதும் தொடர்கிறது.
இந்நிலையில் சிவாஜி நடித்த பச்சை விளக்கு என்ற தலைப்பில், டாக்டர் மாறன் இயக்கி நடிக்கும் புதிய படம் உருவாகி உள்ளது. தீஷா நாயகியாக நடிக்கிறார்.
இது குறித்து, சிவாஜி சமூகநல பேரவை தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:ஆபாச காட்சிகள் உள்ள படங்களுக்கு, பழைய படத்தலைப்புகள் வைப்பதையே எதிர்க்கிறோம்.
ஆனால், பச்சை விளக்கு என்ற புதிய படம், சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தைப் பாராட்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இப்படம் வரும் ஜனவரி முதல் வாரம் வெளியாகிறது

