தமிழ் சினிமா, தமிழக அரசியல் இரண்டிலும் தனி ஆட்சி புரிந்தவர் மறைந்த ஜெயலலிதா. அவரது வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியல் ஆக கௌதம் மேனன், பிரசாந்த் முருகேசன் இயக்கி உள்ளனர். இந்த வெப் சீரியல் டிரைலர் ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியான டிரைலர்களில் தமிழை விட ஆங்கிலம், ஹிந்தி மொழி டிரைலர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இரண்டு மொழி டிரைலர்களுக்கும் இரண்டு நாட்களிலேயே இருபது லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.
தமிழ் டிரைலருக்கு 7 லட்சம் பார்வைகளும், பெங்காலி டிரைலருக்கு 5 லட்சம் பார்வைகளும் வந்துள்ளன.
ஒரு வெப் சீரியலுக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியமானது. அதற்குக் காரணம் இது ஜெயலலிதாவின் பயோபிக். மேலும், ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
‘பாகுபலி’ படத்தில் நடித்தன் மூலம் இந்திய அளவில், ஏன் உலக அளவில் கூட ரம்யா புகழ் பெற்றிருக்கிறார். அதனால், இந்த வெப் சீரியல் டிரைலருக்கு அதிக பார்வைகள் கிடைப்பதில் ஆச்சரியமில்லை.
இந்த வெப் சீரியல் பெறும் வெற்றியால் அடுத்தடுத்து பல பயோபிக் வெப் சீரியல்கள் வரவும் வாய்ப்புள்ளது.

