ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெறுகிறது.
இந்தப் படத்தில் நயன்தாரா நடனமாடும் ஒரு பாடலில் திருநங்கைகளும் நடனமாடுகிறார்களாம். அதற்கான பாடலை திருநங்கைகளையே பாட வைத்து பதிவு செய்திருக்கிறார்கள்.
ஐதராபாத்தைச் சேர்ந்த திருநங்கைகளான சந்திரமுகி, ரச்சனா முத்ரபொய்னா, பிரியா மூர்த்தி ஆகியோர் ‘ஸ்பைசி கேர்ள்ஸ்’ என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார்கள். இவர்களைத்தான் மேலே குறிப்பிட்ட பாடலுக்காக பாட வைத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் படத்தில் தங்கள் குரல் இடம் பெறுவது பற்றியும், தங்களது கிடைத்த இந்த அதிர்ஷ்டமான வாய்ப்பு பற்றியும் மூவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே இந்த ‘ஸ்பைசி கேர்ள்ஸ்’ அந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்களாம்.

