அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த குற்றம் 23 படம், பரவலான பாராட்டுக்களை பெற்றது. இதே ஜோடி, ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படம் குறித்து, அறிவழகன் கூறுகையில், ”இது ஸ்பை ஆக் ஷன் த்ரில்லர் படம். சென்னை, ஐதராபாத், டில்லி உள்ளிட்ட இடங்களில், படப்பிடிப்பு நடைபெற உள்ளது,” என்றார்.

