மலையாள திரையுலகில் பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வருபவர் இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரான இவர், அவரது கஷ்ட, நஷ்டங்களில் எல்லாம் உடனிருந்து பங்கெடுத்து வருபவர்.
கடந்த 2015ல் பிருத்விராஜ், ஜெயசூர்யா நடிப்பில் வெளியான ‘அமர் அக்பர் ஆண்டனி’ படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். இரண்டாவது படத்திலோ கதாசிரியாக தன்னுடன் இணைந்து பணியாற்றிய விஷ்ணு உன்னி கிருஷ்ணனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கட்டப்பனயிலே ரித்விக்ரோஷன் என்கிற படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்து அதையும் ஹிட்டாக்கினார் நாதிர்ஷா..
அதேசமயம் திலீப்பை வைத்து அவர் படம் இயக்க உள்ளார் என்கிற செய்தி கடந்த நன்கு ஆண்டுகளாக அடிபட்டு வந்தது.. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட, அதை உறுதிப்படுத்திய நாதிர்ஷாவும், திலீப்பும், ‘கேசு ஈ வீட்டிண்டே நாதன்’ என படத்திற்கு டைட்டில் வைத்து அதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார்கள்.. ஆனாலும் நான்கு வருட இழுபறிக்குப்பின் இப்போது தான் ஒருவழியாக கொச்சியில் இந்தப்படத்திற்கான துவக்கவிழா பூஜையே நடந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.

