காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து புகழ்பெற்றவர். அதன்பிறகு மானஸ்வி மோஸ்ட் வாண்டட் குழந்தை நட்சத்திரமானார். பல படங்களில் தனது துறு துறு நடிப்பால் கலக்கிய இவர், முதல் முறையாக மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
மை சாண்டா என்ற இந்தப் படத்தை சுஜீத் இயக்கி உள்ளார். இதில் திலீப் உடன் நடித்துள்ளார் மானஸ்வி. ஹீரோயின் இல்லை. கிறிஸ்துமஸ் தினத்தன்று சாண்டா குரூஸ் வேடமிட்டு பயணிக்கும் ஒரு தந்தை, மகளின் கதை. இதில் திலீபுக்கே சவால்விடும் வகையில் நடித்து அசத்தியிருப்பதோடு மலையாள வசனங்களையும் ஏற்ற இறக்கத்துடன் பேசியிருக்கிறாராம்.
பொதுவாக மலையாளத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கொண்டாடப்படுவார்கள். பெரும்பாலும் அங்கிருந்து தான் குழந்தை நட்சத்திரங்கள் தமிழுக்கு வருவார்கள். ஆனால் இப்போது தமிழில் இருந்து மலையாளத்துக்கு சென்றிருக்கிறார் மானஸ்வி. கிறிஸ்துமஸ் தினத்தில் படம் வெளியாகிறது.

