நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான தமிழ் – தெலுங்கு படம் பாகமதி. இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்ததைத் தொடர்ந்து, அதை இந்தியில் ரீமேக் செய்கின்றனர். படத்துக்கு ‛துர்காவதி’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அசோக்கே ஹிந்தியிலும் இயக்க, அனுஷ்கா வேடத்தில் பூமி பட்னேக்கர் நடிக்கிறார்.
இப்படத்தை அக்ஷ்ய் குமாரும் தயாரிக்கிறார். அவர் கூறுகையில், பாகமதி படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்துக்கு துர்காவதி என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் இருந்து படபிடிப்புத் துவங்கும். நான், விக்ரம் மல்கோத்ரா மற்றும் பூஷண் குமார் மூவரும் இணைந்து தயாரிக்கிறோம். தெலுங்கில் எப்படி பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் படம் எடுக்கப்பட்டதோ, அதே விறுவிறுப்பு குறையாமல் இந்தியிலும் எடுக்கப்படும் என்றார்.

