ஹீரோ படத்தைத் தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். டாக்டர் என அப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். அதன் மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 6ம் தேதி துவங்க உள்ளது. இந்த படம் மூலம் தெலுங்கு நடிகை ப்ரியங்கா மோகன் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தில் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான கவின், சமீபத்தில் சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோருடன் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அப்போதிருந்தே சிவா தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், தற்போது அப்படத்தில் கவின் ஹீரோ இல்லை என்பது தெரிய வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்துள்ளனர்.

