ரஜினியைத் தவிர கமல், விஜய், சூர்யா, அஜித் என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டபின், திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அவர், கோலங்கள் சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் அவருக்கு மேலும் நல்ல பெயர் கிடைத்தது. மேலும் சில சீரியல்களில் நடித்த தேவயானி, சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்தார்.
இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்கிறார் தேவயானி. ராசாத்தி என்ற சீரியலில் சௌந்தரவல்லி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். நாயகி ராசாத்தியை வில்லி சிந்தாமணியிடம் இருந்து காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக புரொமோ வீடியோவில் தேவயானி கூறியிருக்கிறார்.

