ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரித்து, நடித்துள்ள படம் ‛டம்மி ஜோக்கர்’. வினோ நாகராஜன்-என்.கல்யாணசுந்தரம் என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள். நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி , தஷ்மிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி பற்றி இயக்குனர்கள் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி கிராமத்திற்கு வருகிறார் வெளிநாட்டில் வாழும் மகன். அவருக்கு அந்த ஊரில் கதாநாயகனும், நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் மக்களே செல்ல பயப்படும் ஒரு பேய் பங்களாவை காட்டி இந்த வீட்டுக்குள் சென்ற உங்கள் தந்தை வெளியில் வரவில்லை என்கிறார்கள். வந்தவர் துணிச்சலுடன் அந்த வீட்டுக்குள் தந்தையை தேடி அந்த வீட்டுக்குள் செல்கிறார்.
தந்தை கிடைத்தால் அவருக்கு. அந்த வீட்டில் இருக்கும் புதையல் கிடைத்தால் நமக்கு என்று கிராமத்து நண்பர்களும் அவருடன் செல்கிறார்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. காமெடி, திகில் இரண்டும் கலந்து உருவாக்கி இருக்கிறோம் என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள்.

