சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ஆதித்ய வர்மா. அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் அவருடன் பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முதல் நாளன்று விக்ரம் படங்களுக்கு கொடுப்பது போன்ற வரவேற்பை துருவ் விக்ரம் படத்திற்கும் அவரது ரசிகர்கள் கொடுத்தார்கள்.
குறிப்பாக, விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் ரசிகர்களும் துருவ் விக்ரமிற்கு வாழ்த்து கூறி வருவதோடு, துருவ்விக்ரம், ஆதித்ய வர்மா என்ற பெயர்களில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரென்டிங் செய்து வருகிறார்கள்.

