பாகுபலி-2 படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கி வரும் அடுத்த பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சில ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்று வதாக சமீபத்தில் செய்திகள் வெளியான நிலையில், தற்போது ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ராம்சரண்-ஆலியாபட் நடிக்கும் ரொமான்டிக் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த படத்தில் ஆலியாபட்டின் கேரக்டரை படம் ரிலீசாவது வரை சஸ்பென்சாக வைக்க திட்டமிட்டுள்ளார் ராஜமவுலி. அதனால் படப்பிடிப்பு தளத்திற்கு வெளிநபர்கள் யாரும் வராத வகையில் கடுமையான செக்யூரிட்டி போட்டு படமாக்கி வருகிறாராம்.

