சினிமாவில் பிசியாக நடித்து வரும் ரகுல்பிரீத்சிங், ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் மூன்று உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார். இதில் இளம் பெண்கள் மட்டுமின்றி, வயதான உடல் பெருத்த பெண்களுக்கு டயட்ஸ் மற்றும் உடற்பயிற்சி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக உணவு மற்றும் குளிர்பானங்கள் சம்பந்தப்பட்ட இன்னொரு சைடு பிஸ்னஸை தான் தொடங்கப்போவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ள ரகுல்பிரீத்சிங், இந்த உணவுகளும் வெயிட் போடாத டயட்ஸ் சம்பந்தப்பட்ட உணவுகளாகவே இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

