மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் மூலம் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். தமிழிலும் அந்த படத்தின் ரீமேக்கை கமலை வைத்து பாபநாசம் என்கிற பெயரில் இயக்கினார்..
இதையடுத்து மலையாளத்தில் அவர் இயக்கிய இரண்டு படங்கள் சரியாகப் போகாத நிலையில், இந்தியில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மியை வைத்து ‘பாடி’ என்கிற படத்தை இயக்கினார்.. அந்தப்படம் இன்னும் ரிலீசாகாத நிலையில் தற்போது கார்த்திக், ஜோதிகா இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதமே இவர் இயக்கிய முடித்து தயார் நிலையில் இருக்கும் இந்தி படமான ‘பாடி’ திரைப்படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜீத்து ஜோசப்பின் படங்கள் இரண்டும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

