பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபலமானவர் தர்ஷன். இந்த சீசனின் இறுதியில் பேசிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகர் கமல், தர்ஷனை வைத்து, என்னுடைய ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஒரு படம் எடுக்கப்படும். அதில், தர்ஷனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில், ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கு புது அலுவலகம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், ராஜ் கமல் நிறுவனம் பெரிதாக வளர்க்கப்பட்டிருகிறது. அந்தப் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நான் தான் நடிக்கப் போகிறேன் என்பது இல்லை. என்னை வைத்துதான் படமெடுக்க வேண்டும் என்பதில்லை. நான் விரும்பும், நான் கமிட்மெண்ட் கொடுத்த ஒரு நடிகர் என் நிறுவனத்தின் சார்பில் எடுக்கப்படும் படத்தில் நடிப்பார் என்று கூறினார்.
கமல் சொன்ன அந்த நபர் தர்ஷனாக இருக்கலாம் என தெரிகிறது. இதைக் கேள்விபட்டு, தர்ஷன் குஷியாகி இருக்கிறாராம்.

