ராணா, சாய் பல்லவி, நந்திதாதாஸ் இணைந்துள்ள படம் ‛விரத பர்வம்’. வேணு உடுகுலா இயக்குகிறார். கடந்த ஐந்து மாதங்களாக உடல் நலப்பிரச்சினையால் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்து வந்த ராணா, இப்போது பங்கேற்றுள்ளார்.
1970 – 80களில் தெலுங்கானாவில் நடந்த போலீஸ் – நக்சலைட்டு மோதல் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் அதிரடியான சண்டை காட்சிகள் உள்ளன. அதனால் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஸ்டீபன் ரிச்டர் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் மாதம் முதல் சண்டைக்காட்சி படமாக்கப்பட இருப்பதால் அதற்கான ஒத்திகையில் ஈடுபட உள்ளார்.

