தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு காதலரை நெடுங்காலம் காதலித்து வந்தார். அவரை ரகசிய திருமணம் செய்ததாக கூட கூறப்பட்டது. ஆனால் காதல் கசந்ததால் அவரை விட்டு பிரிந்துவிட்டார். மீண்டும் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என்பதற்காக விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் ஒருவருடன் இலியானா காதல் வலையில் விழுந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ளார் இலியானா. ‛‛மீண்டும் காதலிக்க நான் தயார் இல்லை. சிங்கிளாக இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ள அவர், என்னையே நான் காதலித்து வருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

