விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து இறுதியாக வெளியான படம் டியர் காம்ரேட். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இதன் இந்தி ரீமேக் உரிமையைக் கரண் ஜோஹார் கைப்பற்றினார். ஆனால், இந்தப் படத்துக்கு கிடைத்த விளம்பரம் அளவுக்கு படம் பெரிய அளவில் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை.
இந்தப் படத்தில் நடித்து முடித்த கையோடு ஓய்வுக்குச் சென்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா. கொஞ்ச கால ஓய்வுக்குப் பின் மீண்டும் நடிக்க வந்தவர், அவரது தயாரிப்பில் மீக்கு மாத்திரமே சொப்பு என்ற படத்தை எடுத்தார். தற்போது அந்தப் படம் ரிலீசாகி விட்டது; என்றாலும், பெரிய அளவில் பேசப்படவில்லை.
இருந்தபோதும், அவர் தொடர்ச்சியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிரபல இயக்குநர் க்ராந்தி மாதவ் இயக்கத்தில் உருவாகி வரும் வேர்ல்டு பேமஸ் லவ் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் எட்டு நாட்களுக்கு மட்டுமே படபிடிப்பு பாக்கி இருக்கிறது. இதனால், இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே, இந்தப் படத்துக்கான அனைத்து பணிகளும் முடிந்து விடும். அநேகமாக, படத்தை புத்தாண்டில் வெளியிட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
அடுத்ததாக, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் பைடர் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இதற்காக, ஜனவரியில் தேதி கொடுத்திருக்கும் விஜய் தேவரகொண்டா, இந்தப் படத்துக்காக குறுகிய நாட்களே ஒதுக்கி இருக்கிறார். அதனால், அந்தப் படமும் விரைவிலேயே முடிந்து விடும்.
இந்தப் படத்தை அடுத்து, பெரும் பொருட்செலவில் உருவாகும் ஹீரோ படத்தை முடித்துக் கொடுப்பதாக, படக் குழுவுக்கு உறுதி அளித்திருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. வரிசையாக, விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும், இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து, மஜிலி படத்தின் இயக்குநர் ஷிவ் நிர்வானா இயக்கத்தில் உருவாகும் ஒரு காதல் படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
இதனால், அடுத்தாண்டு வரிசையாக ரிலீசாக இருக்கும் நான்கு படங்களுக்கும் கால்சீட் கொடுத்து பிசியாக இருக்கும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. இதனால், அவரை மற்ற நடிகர்கள் பொறாமையாக பார்க்கின்றனர்.

