ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றுவதற்கு போட்டி நடைபெற்று வருகிறது.
தெலுங்கில் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் பிரபல விநியோகஸ்தர்கள் தில் ராஜு, எம்.வி.பிரசாத் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் ஆகியோர் தர்பார் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டு முயற்சி செய்து வருகின்றனர்.
வரும் பொங்கலுக்கு தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்லேறு நீக்கெவரு மற்றும் அல்லு அர்ஜுனின் அல வைகுண்டபுரம்லோ என்கிற 2 படங்கள் வெளிவரும் நிலையில் அவற்றுக்கு இணையாக தர்பார் படத்தை ரிலீஸ் செய்யும் நிறுவனத்திற்கு தான் இந்த படத்தை கொடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்

