சூர்யா நடித்த ‘என்ஜிகே’ படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போவதாக ஏற்கெனவே சில தகவல்கள் வெளியாகின. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார் செல்வராகவன். இது குறித்து தன்னுடைய டுவிட்டரில், “திரைக்கதை எழுதுகிறேன். இதை விட பெரிய மகிழ்ச்சி இல்லை, முழுமையான அமைதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திரைக்கதையை அவர் வீட்டிலிருந்தே எழுதுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கதை விவாதம், திரைக்கதை எழுதுதல் ஆகியவற்றை வெளிநாடுகளிலோ, எங்கேயாவது பெரிய ரிசார்ட்டுகளிலேயேதான் பலரும் எழுதுவார்கள்.
செல்வராகவன் ஆச்சரியமாக வீட்டிலேயே எழுதுகிறார்.

