பிரபல மலையாள பட இயக்குனர் ஜோஷியும், நடிகர் திலீப்பும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.. இந்த படத்திற்கு ‘ஆன் ஏர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. டைட்டிலை பார்க்கும்போதே பத்திரிகை உலகம் சம்பந்தப்பட்ட கதை என்பது நன்றாகவே தெரிகிறது.. ஆம் பத்திரிகை உலக பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் பத்திரிகையாளராக நடிக்கிறார் நடிகர் திலீப்.
இதற்கு முன்னதாக மோகன்லால், அமலாபால் நடிப்பில் ரன் பேபி ரன் என்கிற படத்தை இயக்குனர் ஜோஷி இயக்கியிருந்தார் அந்தப் படமும் மீடியா பின்னணியில் அமைந்திருந்தது. இந்தப்படமும் அதேபோல ஒரு விறுவிறுப்பான திரில்லர் படமாக கேரளாவில் நடைபெற்ற ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதாம்.

