இதுவரை ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவராக கருதப்பட்டு வந்த உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் தற்போது மத சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார். அவருக்கு காவி வேஷ்டி அணிவித்தது, சிலை அவமரியாதை செய்யப்பட்டது என தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக இந்த பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
எந்த ஒரு விஷயத்திற்கும் கருத்து தெரிவிக்கும் நடிகை கஸ்தூரி, திருவள்ளுவர் விவகாரத்திலும் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில், திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி. வெறும் கட்சி கொடி அல்ல.
இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா? போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க
வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே… திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு…. என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ‛‛நாங்க அய்யன் வள்ளுவன் என்கிறோம் அவர்கள் “அய்யர்” வள்ளுவர்னு மாத்த பாக்கறாங்க” என ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த கஸ்தூரி, இங்கேயும் வெறுப்பு அரசியலா? எப்பிடி இப்பிடி யோசிக்க முடியுது? ஒருவேளை தமிழ்நாட்டில் அய்யர்கள் இல்லாம போயிட்டா அப்புறம் பகுத்தறிவு பார்ப்பனது வேஷிகள் பிழைப்புக்கு என்ன பண்ணுவீங்க ?
அது சரி. தங்க தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆடையும் பிரச்சினை, திரைப்பட ஆடையும் பிரச்சினை. கலாசார கண்மணிகளே, தமிழகத்தின் விடிவெள்ளிகளே நொட்டை சொல்வதை விட்டொழித்து குறள் சிலவேனும் படித்து அதை பின்பற்றி நடக்க முயலுங்கள்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

