பாலிவுட் நடிகை கத்ரீனாவுக்கு, 36 வயதாகி விட்டது. சல்மான் கான் உள்ளிட்ட பல நடிகர்களுடன், இவருக்கு காதல் இருந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, அந்த காதல் எல்லாம் தோல்வியில் முடிந்து விட்டது. நீண்ட நாட்களாகவே, ‘சிங்கிளாக’ இருந்து வந்த கத்ரீனாவுக்கு, இப்போது ஜோடி கிடைத்து விட்டது.
பிரபல நடிகர் விக்கி கவுசலும், கத்ரீனாவும் காதலித்து வருவதாக, கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த காதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக, மும்பையில் நடக்கும், ‘பார்ட்டி’களுக்கு எல்லாம், கத்ரீனாவும், விக்கி கவுசலும் ஜோடியாகத் தான் செல்கின்றனராம்.

