ரோல்ஸ் ராய் கார் கம்பெனி மற்ற கார் கம்பெனிகளிடமிருந்து வித்தியாசமானது. பணம் இருந்தால் மட்டும் இந்த காரை வாங்கி விட முடியாது. வாங்குபவர்களுக்கு நல்ல பின்னணி இருக்க வேண்டும். கார் கேட்டு விண்ணப்பித்தவரின் பின்னணியை ஆராய்ந்து அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கார் வழங்கும். பல முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகளின் விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் நடிகர் சந்தானம் ரோல்ஸ் ராய் காருக்கு விண்ணப்பித்தார். ஆனால் கம்பெனி நிராகரித்து விட்டது. தமிழ்நாட்டில் விஜய், தனுஷ், இயக்குனர் ஷங்கர் ஆகியோரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய் கார் இருக்கிறது.
இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு ரோல்ஸ் ராய் கார் கிடைத்துள்ளது. ஹன்சிகாவின் தாயார் டாக்டர் மோனா மோத்வானி, மகளுக்கு ரோல்ஸ் ராய் கார் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை கார் நிறுவனம் ஏற்றுக் கொண்டு வழங்கி உள்ளது. ரோல்ஸ் ராய் பேந்தோம் 8 சீரிஸ் வகை கார் இது. இதன் மதிப்பு 10 கோடி ரூபாய். இந்த காரை தீபாவளி பரிசாக மகளுக்கு வழங்கி உள்ளார் தாய் மோனா மோத்வானி.

