தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவர் காஜல் அகர்வால். தற்போது ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருடைய வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
“சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள ஆசை. அதற்காக திட்டமிட்டு வருகிறேன். எனது கணவர் என்னை அதிகம் கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும். மேலும் அவர் பக்திமானாக இருக்க வேண்டும். எனக்கு பக்தி அதிகம் உண்டு. எங்கு படப்பிடிப்புக்குச் சென்றாலும் ஒரு சிறிய சிவன் சிலையைக் கூடவே எடுத்துச் செல்வேன்,” என்று தன் பக்தியைப் பற்றிக் கூறியிருக்கிறார்.
காஜல் கனவுப்படி, அப்படி ஒருவர் சீக்கிரம் கிடைக்க வாழ்த்துவோம்.

