‛அசுரன்’ படத்தில் நடித்துள்ள தனுஷை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகர் வரிசையில் நடிகை ஷெரீனும் புகழ்ந்துள்ளார்.
தனுஷ் முதல் படமான ‛துள்ளுவதோ இளமை’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரீன். அதன்பின் சில படங்களில் நடித்தவர் சமீபத்தில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் டுவிட்டரில், தனுஷை வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛துள்ளுவதோ இளமை படத்தில் தான் தனுஷ் மற்றும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தொடங்கியதோடு திருப்புமுனையாகவும் அமைந்தது. அதனால் தான் இந்த இடத்தில் இருக்கிறேன். தனுஷோ, ‛அசுரன்’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்துடன் இருக்கிறார். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் மைதாமாவு ஷெரீன்” என்று பதிவிட்டுள்ளார்.

