இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது மகன் அமீனையும் ஆல்பம் மற்றும் திரைப்படங்களில் பின்னணி பாட வைத்து வருகிறார். இந்த நிலையில், அடுத்தபடியாக மகனுக்கு இசை சம்பந்தமான பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார்.
அமீனுக்கு அவர் இசைப்பயிற்சி கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கீப்போர்டில் இசையை வாசிக்க, அதற்கு அமீன், ரிதம் பாக்ஸில் ரிதம் பீட் வாசிக்கிறார். இது மட்டுமின்றி சமீபகாலமாக ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்கும்போதும் அவருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார் அமீன்.

