‘பிகில்’ படத்தை அடுத்து அதன் இயக்குனர் அட்லீ, ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடிக்கப் போகும் படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம், அவர் தெலுங்கிலும் ஒரு படத்தை இயக்க அட்வான்ஸ் வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது.
நேற்று ஐதராபாத்தில் ‘பிகில்’ படத்தின் தெலுங்கு டப்பிங் படமான ‘விசில்’ படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அட்லீ தெலுங்குப் படத்தை இயக்க மிகவும் ஆவலாக இருப்பதாகப் பேசியுள்ளார்.
“என்னுடைய தமிழ்ப் படங்கள் வெளியானதும், ஜுனியிர் என்டிஆரிடம் இருந்து எனக்கு போன் வந்துவிடும். என்னை எப்போதுமே அவர் பாராட்டுவார். மிகவும் நல்ல மனம் படைத்தவர்,” என்று கூறியிருக்கிறார்.
அதனால், அவர் ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள படத்தை தெலுங்கில் இயக்கலாம் எனத் தெரிகிறது. ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் முடிவடைந்த பின் ஜுனியர் என்டிஆர், அட்லீ கூட்டணி தெலுங்கில் இணையலாம் என்கிறார்கள்.

