மன்னன் படத்தில் நடிக்கும் போது ரஜினியோடு ரொமான்ஸ் செய்யப் பயந்ததாக தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு.
கடந்த 1991ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, கவுண்டமணி, மனோரமா, விசு உள்ளிட்டோர் நடித்த படம் மன்னன். மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் ரஜினி முதலில் குஷ்புவைக் காதலிப்பார். பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் விஜயசாந்தியை திருமணம் செய்து கொள்வார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட். இந்தப் படத்திற்குப் பிறகு அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடித்திருந்தார்.
இந்நிலையில் குஷ்பு தற்போது நடிகர் ரஜினி குறித்து மன்னன் படத்தில் நடித்த போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு ஒரு டுவீட் செய்துள்ளார். அதில், ” தற்செயலாக இந்த புகைப்படம் கிடைத்தது. ரஜியை ரொமான்ஸ் செய்ய எவ்வளவு நடுங்கினேன் என்பது இப்போதும் என் நினைவில் இருக்கிறது”, என குறிப்பிட்டுள்ளார்.
குஷ்புவின் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர்கள், மீண்டும் நீங்கள் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

