சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து, கொரட்டல்லா சிவா இயக்கும் தனது 152வது படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. நடுத்தர வயது கொண்ட கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்த படத்தில் பாலிவுட் இரட்டை இசையமைப்பாளர்கள் அஜய் – அதுல் ஆகியோர் இசைமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஹிந்தியில் தடக், தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். மேலும், கொரட்டல்ல சிவா, தனது படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத்தையே இசையமைக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

