அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‛பிகில்’ படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‛கைதி’ படமும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ல் வெளியாகிறது. விஜய், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் நாளன்று அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, இந்த இரண்டு படங்களையும் தீபாவளியை ஒட்டி 24 மணிநேரமும் தியேட்டர்களில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அனுமதி கேட்டு தமிழக அரசை முறையிட்டுள்ளது.
இதுப்பற்றி திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், ‛‛பட வெளியீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பாக 24 மணி நேர தொடர் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்துவிடும் என நம்புகிறோம் என்றார்.

