நடிகர் சூர்யா தற்போது இறுதிச் சுற்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், பிரபல பாடகர் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன், இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும், இந்த பாடலின் இசையைக் கேட்பவர்களுக்கு, புதிய அனுபவத்தை தரும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

