நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான கிருஷ்ண வம்சி தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருப்பவர். இவர், 1998ல் இயக்கிய ‛சந்திரலேகா’, 2004ல் இயக்கிய ‛ஸ்ரீ ஆஞ்சநேயம்’ படங்களில் நாயகியாக ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அதன்பின் கணவர் இயக்கிய படங்களில் அவர் நடிக்கவில்லை.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின் கிருஷ்ண வம்சி இயக்கும் வந்தே மாதரம் என்ற படத்தில் நடிக்கப் போகிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நடிகை அவிகா கோர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

