நடிகர் அஜித் மற்றும் நடிகை வித்யா பாலன் ஆகியோர் நடிப்பில் உருவான படம் நேர் கொண்ட பார்வை. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார். நடிகை ஸ்ரீ தேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிக் கபூர் படத்தை தயாரித்திருந்தார்.
அந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக மலையாள நடிகர் சுஜித் சங்கர், கவாஸ்கர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், நள தமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்த கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் மோதோன் என்ற மலையாள படத்தில் சுஜித் சங்கர் நடிக்கிறார். அந்தப் படத்தில் அவர் திருநங்கையாக நடித்து வருகிறார்.

