வெக்கை’ நாவலின் கதையை மையமாக வைத்து, இயக்குநர் வெற்றி மாறன் சமீபத்தில் ‘அசுரன்’ படத்தை இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ், மலையாள நடிகை மஞ்சு வாரியர், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். எஸ்.தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில், நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர் நடிப்பை பலரும் பாராட்டுகின்றனர். மேலும், இதில் பசுபதி, பிரகாஷ் ராஜ், டிஜே, கென், ஆடுகள் நரேன், பவன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் தனுஷையும், இயக்குநர் வெற்றி மாறனையும் பாரட்டி வருகின்றனர்.
நேற்று, இந்தப் படத்தை தன்னுடைய மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து நடிகர் கமல் பார்த்திருக்கிறார். அசுரன் படம் கமலை வெகுவாக கவர்ந்து விட்டது.
இதையடுத்து, வெளி நாட்டில் சூட்டிங்கில் இருக்கும் நடிகர் தனுஷை போனில் தொடர்பு கொண்ட நடிகர் கமல், அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, தொடர்ந்து இதே மாதிரியான நல்ல கதையமைசம் உள்ள படங்களில் நடிக்கவும் கேட்டுக் கொண்டார்.

