2017ல் திருமணம் செய்து கொண்ட நமீதா, பின்னர் மலையாளத்தில் மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் நடித்தார். அதன்பிறகு மியா என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படம் தாமதமாகி வருகிறது. அதனால் இப்போது டோலிவுட்டில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார் நமீதா.
முன்னதாக, தான் இப்போது முன்பை விட ஸ்லிம்மாகி விட்டதை தெலுங்குப்பட இயக்குனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஸ்லிம் உடல் தோற்றத்துடன் தான் எடுத்துக்கொண்டு ஒரு ஆல்பத்தையும் டோலிவுட்டில் சுற்றலில் விட்டுள்ளார் நமீதா.

