ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் பிரபலமான இயக்குநரானார் அட்லீ. அதன் பின், விஜய் நடிப்பில் உருவான தெறி, மெர்சல் படங்களை இயக்கினார். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் பிகில் படத்தையும் இயக்கி இருக்கிறார். வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் அட்லீயின் மனைவி ப்ரியா, சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். உடலை பேணி பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தி வரும் பிரியா, யோகா செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஷாப்பிங்கோ, யோகா பயிற்சியோ.. எல்லாவற்றையும் அப்படியே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் உள்ள ப்ரியா, அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
தான் யோகா மாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்வது போன்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களையெல்லாம் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பிரியா பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

