‛நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு பின் மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைகிறார் அஜித். இந்த படத்திற்காக தற்போது இளமையான கெட்டப்பில் இருக்கும் அவர், சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அப்போது அவர்களுடன் செல்பியும் எடுத்தார் அஜித்.
இந்த நிலையில் தனது உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியும் செய்யும் அஜித், தினமும் மாலை வேலைகளில் தனது வீடு அமைந்துள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பீச்சுக்கு மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் நடைபயிற்சியும் செய்து வருகிறார். இதை ரசிகர் ஒருவர் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

