நடிகை அனுஷ்கா முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் நிசப்தம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘நிசப்தம்’ திரைப்படத்தில் நடிகர் மாதவன் ‘அந்தோணி’ என்ற இசைக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்காக, இசைக் கலைஞர்களை சந்தித்து, அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைகளையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார் நடிகர் மாதவன்.

