இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான படம் ‛பென்சில்’ என்றாலும் முதலில் வெளியான படம் ‛டார்லிங்’. இது ஒரு காமெடி கலந்த பேய் படம். அதன்பின் அவர் பேய் படம் எதிலும் நடிக்கவில்லை. தற்போது எழில் இயக்கும் ‛ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் பேயாக நடிக்கிறார்.
ஒரு காலத்தில் சென்ட்டிமென்ட் மற்றும் காதல் படங்களை இயக்கிய எழில், இப்போது காமெடி படங்களை இயக்கி வருகிறார். அவர் இயக்கும் முதல் காமெடி, பேய் படம் இது.
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக இஷா ரெப்பா, நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. படத்தில் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டனர்.

