மகேஷ்பாபு நடித்த பாரத் அனே நேனு படத்தை இயக்கிய கொரட்டல்ல சிவா, அந்த படம் மே மாதம் வெளியானதில் இருந்தே சிரஞ்சீவியின் புதிய படத்தை இயக்குவதற்காக காத்துக் கொண்டிருந்தார். இப்போது சைரா படம் வெளியாகி விட்டதால் அடுத்த மாதம், முதல் வாரத்தில் இருந்து சிரஞ்சீவி நடிக்கும் பட வேலைகளை துவங்குகிறார். இந்த படத்தை நிரஞ்சன் ரெட்டி என்பவருடன இணைந்து நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். நடுத்தர வயது கொண்ட வேடத்தில் சிரஞ்சீவி நடிப்பதால் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோரிடம் பேசி வருகின்றனர்.

