மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளான இன்று(அக்.,1) அவருக்கு ஏராளமான ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛நடிகர் திலகத்தின் நடிப்பை போல அவரது உடலுக்கும் மரணம் இல்லை என மற்ற அப்பாவி ரசிகர்கள் போல் நானும் நம்பினேன். அவர் இறந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டபோதும் அவரின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள், அவர் நம்முடன் இல்லையே என்ற எண்ணத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா” என பதிவிட்டுள்ளார்.

