‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, சில திரைப்படங்களில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், அது தொடர்பான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ”தற்போது நடிக்கும் படத்தில், ரகசியமான வேடத்தில் நடிக்கிறேன். அது குறித்து, வெளியே சொல்லக்கூடாது. மேலும் தயாரிப்பு, இயக்குனர் குறித்தும் சொல்லக் கூடாது. ஆனால், அது தமிழ் படம்,” என்றார்.

