சந்தானம், சூரிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் காமெடியனாகியிருக்கும் யோகிபாபு, ஒரு டஜன் படங்களுக்கு மேல் காமெடியனாக நடிப்பவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். குறிப்பாக, ரஜினி, விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களின் படங்களில் பிரதான காமெடியனாகியிருக்கிறார்.
இந்த நிலையில், வருகிற அக்டோபர் 11-ந்தேதி யோகிபாபு காமெடியனாக நடித்துள்ள பெட்ரோமாக்ஸ், இருட்டு, பப்பி, பட்லர்பாபு போன்ற படங்கள் திரைக்கு வருகின்றன. இப்படி யோகிபாபு நடித்த நான்கு படங்கள் ஒரேநாளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

