இயக்குனர் பிரியதர்ஷன் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் தனது படங்களின் மூலம் முத்திரையை பதித்துள்ளார். தற்போது மோகன்லாலை வைத்து மிக பிரம்மாண்டமான வரலாற்று படமான ‘மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில் சமீபத்தில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அமிதாப்புக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரியதர்ஷன்.
இந்த வாழ்த்து செய்தியுடன் அமிதாப் பச்சனை வைத்து ஒரு திரைப்படமாவது இயக்கிவிட வேண்டும் என்கிற தனது கனவு மட்டும் இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது என்கிற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.. அதேசமயம் அமிதாப் பச்சனை வைத்து கிட்டத்தட்ட 40 விளம்பரங்களை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்பது இன்னொரு ஆச்சரியமான தகவல்

