தெலுங்குத் திரையுலகத்தின் அடுத்த பிரம்மாண்டமான வெளியீடாக ‘சைரா’ படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள அந்தப் படத்தில் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துளளனர்.
இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்வுகள் எதிலும் நயன்தாரா பங்கெடுக்கவில்லை. கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த நிகழ்வில் மட்டுமாவது அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதில் கலந்து கொள்ளவில்லை.
நேற்று மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்வில் தமன்னா கலந்து கொண்டார்., இன்று சென்னையில் படத்தின் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டுள்ளார். அடுத்து கேரளா, பெங்களூரு ஆகிய இடங்களிலும் கலந்து கொள்ள உள்ளாராம் தமன்னா.
படத்தின் அதிக முக்கியத்துவமுள்ள கதாநாயகியாக உள்ள நயன்தாரா கலந்து கொள்ளாத நிலையில், இரண்டாவது கதாநாயகியாக படத்திலுள்ள தமன்னா கலந்து கொள்வதை தெலுங்கு மீடியாக்கள் பாராட்டி எழுதி வருகின்றன.

